விருதுநகர்: தமிழகத்தில் இந்த கல்வியாண்டில் 100 உயர்நிலைப்பள்ளிகளை, மேல் நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தவும், புதியதாக ஆசிரியர்களை நியமிக்கவும் அரசு முடிவு செய்துள்ளது.
கிராம மாணவர்கள் நகர்ப்புறங்களுக்கு வராமல், கிராமங்களிலேயே மேல்நிலைகல்வி பெறும் வகையில், இந்த ஆண்டு உயர்நிலை பள்ளிகளாக உள்ள 100 பள்ளிகளை, மேல்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது.
கடந்த ஆட்சியில் தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப்பள்ளிகளில் ஒரு தலைமையாசிரியர் உட்பட ஆறு பணியிடம் ஏற்படுத்தப்பட்டது. தற்போது தரம் உயரும் பள்ளிகளில் 10 பணியிடங்கள் ஏற்படுத்தப்பட உள்ளன. இதில், தமிழ் உள்ளிட்ட கலைப்பிரிவு பாடங்களுக்கு முதுகலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதன்படி, 100 பள்ளிகளுக்கு ஆயிரம் முதுகலை ஆசிரியர்கள் பணியிடங்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை சட்டசபை கூட்டத்தொடரில் கல்வித்துறை மானியக் கோரிக்கையின்போது, அரசு வெளியிட திட்டமிட்டுள்ளது.

No comments:
Post a Comment