FLASH NEWS

***HONRABLE MINISTER FOR INDUSTRIES THIRU P.THANGAMANI DELIVERS THE SPECIAL ADDRESS and Dr.E.BALAGURSAMY MEMBER AND STATE PLANNING COMMISSION and HIGH LEVEL SYLLABUS COMMITTEE TAMIL NADU WILL PRESIDE OVER THE MEETING ,SEP 29TH AT VETRI VIKAS HSS ,MALLUR NAMAKKAL ALL MATHEMATICS PG TEACHERS ARE REQUESTED TO ATTEND THE MEETING (TNMPGTA) @@@ OUR AIM IS TO GET 50 MARKS in MATHS PRACTICAL @@@@

Friday, 28 October 2011

தலைமையாசிரியர்களுக்கான கலந்தாய்வு துவக்கம் அக்டோபர் 28,2011

சென்னை:அரசு மற்றும் நகராட்சி மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வுக்கான கவுன்சிலிங், வரும் 30ம் தேதி மற்றும் 31ம் தேதிகளில் சென்னையில் நடைபெறுகிறது.பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:கடந்த, ஜனவரி 1ம் தேதி வெளியிடப்பட்ட முன்னுரிமைகளின் அடிப்படையில், அரசு மற்றும் நகராட்சி மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களின், பதவி உயர்வுக்கான கவுன்சிலிங், வரும் 30ம் தேதி மற்றும் 31ம் தேதிகளில், சென்னை, அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் கீழ்கண்ட முறையில் நடை பெற உள்ளது.அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வுக்கான கவுன்சிலிங், வரும் 30ம் தேதி காலை 8 மணிக்கு, துவங்குகிறது.

இதில், தலைமை ஆசிரியர்களுக்கான முன்னுரிமை பட்டியலின் வரிசை எண் 1 முதல் 336 வரை, அரசு பள்ளி முதுகலை ஆசிரியர்களுக்கும், வரிசை எண் 1 முதல் 11 வரை நகராட்சி பள்ளி முதுகலை ஆசிரியர்களுக்கும், வரிசை எண் 1 முதல் 122 ஏ வரை, அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், வரிசை எண் 1 முதல் 5 வரை நகராட்சி உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் நடைபெறுகிறது.

வரும் 31ம் தேதி, காலை 8 மணிக்கு அரசு, நகராட்சி உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வட்டார வளமைய மேற்பார்வையாளர்களுக்கான பதவி உயர்வுக்கான, வரிசைப் பட்டியலின்படி,வரிசை எண் 1 முதல் 641 வரை, அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும், வரிசை எண் 1 முதல் 3 வரை நகராட்சி உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும், வரிசை எண் 1 முதல் 31 வரை முதுகலை ஆசிரியர்களிலிருந்து பணிமாறுதல் மூலம் வட்டார வளமைய மேற்பார்வையாளர் பதவிக்கு பணி புரிய விருப்பம் தெரிவித்தவர்களுக்கும், கலந்தாய்வு நடைபெறுகிறது.முன்னுரிமைப் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள வரிசை எண்ணிற்குரிய ஆசிரியர்கள் மேற்கூறியபடி, கலந்தாய்வில் கலந்துகொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகின்றனர்.இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment