கருணை மதிப்பெண் கேட்டு வழக்கு
பிளஸ் 2 கணித தேர்வு கேள்வித்தாளில் குளறுபடி
மதுரை, ஏப். 3:
பிளஸ்
2 கணித தேர்வில் கேள்வித்தாள் குளறுபடியால் பாதிக்கப்பட்ட மாணவ,
மாணவிகளுக்கு கருணை மதிப்பெண் வழங்கக்கோரி தாக்கலான மனுவுக்கு பதிலளிக்க
ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை எம்.கே.புரத்தை சேர்ந்த ராமலிங்கம், ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு:
பிளஸ்
2 கனித தேர்வு மார்ச் 14ம் தேதி நடந்தது. கணித தேள்வில் கேள்வித்தாள்
எப்படி இருக்க வேண்டும் என முறை உள்ளது. அந்த முறைக்கு மாறுபட்டு
கேள்வித்தாள் இருந்தது. கணித கேள்வித்தாளில் பிரிவு ஏ&யில் ஒரு மார்க்
கேள்விகள் 40, பிரிவு பி&யில் 6 மார்க் கேள்விகள் 15, பிரிவு
சி&யில் பத்து மார்க் கேள்விகள் 15 இருக்க வேண்டும். பிரிவு பி,
சி&யில் தலா பத்து கேள்விகளுக்கு விடையளிக்க வேண்டும்.
மாணவர்களின்
அறிவை சோதிக்கும் கேள்விகள், மாணவர்களின் புரிந்து கொள்ளும் தன்மையை
சோதிக்கும் கேள்விகள், கேள்வியை புரிந்து எப்படி விடையளிக்க வேண்டும் என்ற
திறனை சோதிக்கும் கேள்விகள் மூன்று பிரிவிலும் இடம் பெற வேண்டும். இவை தவிர
மாணவர்களின் தனித்திறனை சோதிக்கும் கேள்விகளும் மூன்று பிரிவிலும் இடம்
பெறும்.
ஆனால், மார்ச் 14ம் தேதி நடந்த
கணித தேர்வில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கேள்வித்தாள் மாறுபட்டதாக
இருந்தது. இதனால், மாணவ, மாணவிகளால் சரியாக தேர்வு எழுத முடியவில்லை. கணித
தேர்வு கடினமாக இருந்ததால் வாடிப்பட்டியில் மாணவன் ஒருவன், பள்ளி மாடியில்
இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றான். காட்பாடி பள்ளி மாணவி ஐஸ்வர்யா
தற்கொலை செய்து கொண்டார்.
எனவே, மூத்த
முதுநிலை கணித ஆசிரியர்கள் அடங்கிய குழு அமைத்து, மார்ச் 14ம் தேதி
வழங்கப்பட்ட கணித கேள்வித்தாள், கணித கேள்வி தாள் மாதிரி அடிப்படையில்
இருந்ததா? அல்லது மாறுபட்டு இருந்ததா? என்பதை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல்
செய்யவும், கணித தேர்வில் மாணவ, மாணவிகளுக்கு கருணை மதிப்பெண் வழங்கவும்
உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
மனுவை
நீதிபதிகள் சித்ரா வெங்கட்ராமன், விமலா விசாரித்தனர். மனுவுக்கு பதிலளிக்க
அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை இன்றைக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.
could you please send new maths text book for 2018-2019
ReplyDelete