முதல்பக்கம் » செய்திகள்மேல்நிலை வகுப்பு கணித பாடத்திற்கு பிராக்டிகல் மதிப்பெண் தேவை என, முதுநிலை ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர். பிளஸ் 2 கணித பாடத்தில் ஆண்டுக்காண்டு தேர்ச்சி சதவீதம் குறைவதாக ஆசிரியர்கள் கருதுகின்றனர்.
கடந்த ஆண்டு 4,000 பேருக்கு மேல் 100 சதவீத மதிப்பெண் பெற்ற நிலையில், இந்தாண்டு இரண்டாயிரத்துக்கு மேற்பட்டோரே பெற்றனர். கணிதத்தில் தோல்வி அடைவோர் முந்தைய காலங்களில் 10 சதவீதம் என்பது, தற்போது 15 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதனால், கணிதப் பாடத்தை எளிமையாக்க வேண்டும் என்ற கருத்து உருவாகியுள்ளது.
பாடத்தை எளிமையாக்குவதைவிட, கணிதப் பாடத்திலும் 50 மதிப்பெண்ணுக்கு பிராக்டிகல் தேர்வு வேண்டும் என கருதுகின்றனர். மாணவர்கள் நலன் கருதி, மத்திய கலைத் திட்டப்படி, கணிதத்தை எளிமையாக கற்க, அறிவியல், புள்ளியியல், புவியியல் பாடங்களுக்கு உள்ளது போல பிராக்டிகல் அவசியம் என்று கூறப்பட்டுள்ளது. நாமக்கலில் கூடிய, தமிழ்நாடு கணிதப் பாட முதுநிலை ஆசிரியர்கள் கழகத்தினர் இதை வலியுறுத்தினர். இதற்கான மாநில கூட்டம், மாநில தலைவர் விஜயகுமார் தலைமையில் நடந்தது. கணித ஆசிரியர்கள் பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், மேல்நிலை கணித பாடங்களை, தற்போது கல்லூரி ஆசிரியர்களே வடிவமைத்து வருகின்றனர். இதை முதுநிலை ஆசிரியர்களே வடிவமைக்க முழு உரிமை தரவேண்டும். அதே போல, பொதுத் தேர்வுகளின் போது வினாத்தாள் மற்றும் விடைக்குறிப்பு (கீ ஆன்சர்) தயாரிக்கவும் வாய்ப்பு தரவேண்டும். தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்ற அரசை பாராட்டுவது, கணிதப் பாட ஆசிரியர்கள் மாநில மாநாட்டை தென்மாநிலத்தில் நடத்துவது, அதில் கல்வி அமைச்சரை பங்கேற்கச் செய்வது என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?cat=1&id=10149
No comments:
Post a Comment