FLASH NEWS

***HONRABLE MINISTER FOR INDUSTRIES THIRU P.THANGAMANI DELIVERS THE SPECIAL ADDRESS and Dr.E.BALAGURSAMY MEMBER AND STATE PLANNING COMMISSION and HIGH LEVEL SYLLABUS COMMITTEE TAMIL NADU WILL PRESIDE OVER THE MEETING ,SEP 29TH AT VETRI VIKAS HSS ,MALLUR NAMAKKAL ALL MATHEMATICS PG TEACHERS ARE REQUESTED TO ATTEND THE MEETING (TNMPGTA) @@@ OUR AIM IS TO GET 50 MARKS in MATHS PRACTICAL @@@@

Sunday 7 April 2013

பிளஸ் 2 கணித தேர்வு: 6 மதிப்பெண் வினாவுக்கான விடையை மாற்றி திடீர் உத்தரவு

பிளஸ் 2 கணித தேர்வு: 6 மதிப்பெண் வினாவுக்கான விடையை மாற்றி திடீர் உத்தரவு

First Published : 07 April 2013 12:45 AM IST
அண்மையில் நடந்து முடிந்த பிளஸ் 2 கணித பாடத் தேர்வு வினாத்தாள் தொடர்பான குழப்பங்கள் தொடர் கதையாகி உள்ளன. விடைத்தாள் திருத்தும் பணி நிறைவடையும் நிலையில், 6 மதிப்பெண் வினாவுக்கான விடையைத் திருத்திக் கொள்ளும்படி ஆசிரியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழகம், புதுவையில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 தேர்வுகளை சுமார் 8.50 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ளனர். இந்நிலையில் கடந்த மார்ச் 14-ம் தேதி நடைபெற்ற கணித பாடத் தேர்வில் கடினமான வினாக்கள் இடம் பெற்றிருந்ததாக புகார் எழுந்தது. புளூ பிரிண்ட் அடிப்படையில் வினாக்களைத் தேர்வு செய்யவில்லை என்று பல மாணவர்கள் கவலை தெரிவித்திருந்தனர்.
இதனால் கணித பாடத்தில் மதிப்பெண்கள் குறையும் என்றும் இது பொறியியல், மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கையிலும் எதிரொலிக்கும் என்றும் கருதப்படுகிறது. புளூ பிரிண்டுக்கு மாறாக வினாத்தாள் தயாரித்ததாக தேர்வுத் துறை மீது குற்றம்சாட்டி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மதுரை, எம்.கே.புரத்தைச் சேர்ந்த கே.ஆர்.ராமலிங்கம் என்பவர் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
கடினமான கணித வினாத்தாள் காரணமாக காட்பாடி மாணவி வி.ஈஸ்வரி தற்கொலை செய்து கொண்டது, வாடிப்பட்டி அரசுப் பள்ளி மாணவர் ஆர்.நந்தகுமார் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது உள்ளிட்ட சம்பவங்களை மேற்கோள் காட்டி இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது தொடர்பாக தேர்வுத் துறை வரும் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 9) பதிலளிக்க உள்ளது.
இந்த நிலையில் கணித பாட வினாத்தாளில் மேலும் பல குளறுபடிகள் இருப்பது தெரியவந்துள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் கணித விடைத்தாள் திருத்தும் பணி ஓரிரு நாள்களில் நிறைவடைய உள்ள நிலையில், வினாத்தாளில் 6 மதிப்பெண் பிரிவில் இடம் பெற்றுள்ள 41-வது வினாவுக்கான விடையைத் திருத்தி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு முதலில் வழங்கப்பட்ட விடைக் குறிப்புகளில் (கீ-நோட்ஸ்) அணிகள் பாடத்தில் இருந்து இடம் பெற்றுள்ள அந்த 41-வது வினாவுக்கான விடை தவறுதலாக இடம் பெற்றுள்ளதாகவும், அதை திருத்திக் கொள்ளும்படியும் கூறி இந்தத் திருத்தம் திடீரென வழங்கப்பட்டுள்ளது. சுமார் 95 சதவீத விடைத்தாள்கள் திருத்தப்பட்டுள்ள நிலையில், அந்த மாணவர்களுக்கான மதிப்பெண்ணை எப்படி கணக்கில் எடுத்துக் கொள்வது என்ற குழப்பம் ஆசிரியர்களுக்கு இப்போது ஏற்பட்டுள்ளது.
இது குறித்து ஆசிரியர்கள் கூறும்போது, தமிழ் வழியில் படித்து தேர்வு எழுதிய மாணவர்களுக்கு வழங்கப்பட்ட வினாத்தாளில் 41-வது வினாவில் அச்சுப் பிழை ஏற்பட்டுள்ளது. எனவே அந்த வினாவுக்கான விடை வெள்ளிக்கிழமை முதல் மாற்றப்பட்டுள்ளது. அந்த வினாவுக்கான விடையை 5 என்றோ -5 என்றோ யார் எழுதியிருந்தாலும் அவர்களுக்கு முழு மதிப்பெண் வழங்கும்படி கூறப்பட்டுள்ளது. ஆனால் இதுவரையிலும் திருத்தியுள்ள விடைத்தாளில் தவறான விடை அளித்தவர்களுக்கு மதிப்பெண் வழங்கவில்லை. இதனால் அவர்களுக்கு தற்போது எப்படி மதிப்பெண் வழங்குவது என்று புரியவில்லை என்றனர்.
தவறான வினா: இதற்கிடையே 10 மதிப்பெண் பிரிவில் ன் ள்ண்ய் (ஷ்ஹ்) என்று தொடங்கும் 64-வது வினா தவறான வினா என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த வினாவுக்கு விடையளிக்க முயற்சித்த மாணவர்களுக்கு 6 மதிப்பெண் வழங்கலாம் என்றும் தேர்வுத் துறை குறிப்பு அனுப்பியுள்ளது.
உத்தரவு வழங்கியது யார்?
இந்த இரண்டு திருத்தங்களும் வியாழக்கிழமை காலை முதல் வெள்ளிக்கிழமை மாலை வரையிலும் சென்னை, திருப்பூர், சேலம் உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இருப்பினும் அந்த உத்தரவில் தேர்வுத் துறை இயக்குநரின் கையொப்பம் கூட இல்லை என்று ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து தேர்வுத் துறை இயக்குநர் வசுந்தரா தேவி கூறும்போது, அதுபோன்ற திருத்தங்கள் ஏதும் வழங்கப்படவில்லை என்றார்.
மேலும் மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கும் திட்டமும் இல்லை என்றார்.
இதனால் இந்த திருத்தங்களை விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு வழங்கியது யார் என்ற புதிய குழப்பமும் ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment